தாலிபன்களுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக தகவல்..!
தோஹாவில் தாலிபன் அதிகாரிகளுடன் அமெரிக்க மூத்த அதிகாரிகள் நடத்திய நேரடி பேச்சுவார்த்தை, ஒளிவு மறைவு இன்றியும், தொழில்முறைப்படியும் நடத்தப்பட்டதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு முதன்முறையாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, அங்குள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஆப்கன் சென்ட்ரல் வங்கியின் அன்னிய செலாவணி இருப்பு மீதான தடையை விலக்குமாறு தாலிபன்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆப்கனுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தயார் என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments